--- --:--:-- --

தாறுமாறாக காரை ஒட்டிய சிறுவன்..பைக் மீது மோதி விபத்து..!

7

நெல்லை மாவட்டத்தில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சிறுவன் மற்றும் காரை ஓட்ட அனுமதித்த பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். சாலையில் காரை ஓட்டி வந்த அந்த சிறுவன் பின்னால் வாகனம் வருகிறதா என்பதை கூட கவனிக்காமல் திடீரென்று வலது புறம் திருப்பினார்.

 

அப்பொழுது பின்னல் பைக்கில் வந்து கொண்டிருந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்ஜ் என்பவர் காரின் மீது மோதியதில் கீழே விழுந்து காயமடைந்தார்.

 

விபத்து நடந்த உடன் காரிலிருந்து இறங்காமல் காரை ஓட்டி சென்ற காட்சி அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. சிசிடிவி பதிவை கொண்டு விசாரித்ததில் காரை 15 வயது சிறுவன் ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon