--- --:--:-- --

மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர்..!

4

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் பணியாற்றிய மருத்துவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு தினம்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு பணிக்கு வந்த அரசு மருத்துவர் நல்லதம்பி மது அருந்திவிட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

 

இதனை கண்ட நோயாளிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தன்னை வீடியோ எடுப்பதை கண்ட மருத்துவர் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற முயன்றார். இந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து மருத்துவமனை டீன் ரேவதியிடம் கேட்ட பொழுது உடனடியாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

 

Right Menu Icon