இரண்டு நாள் விடுமுறைக்கு பின் கிருஷ்ணகிரி பள்ளி இன்று திறப்பு..!
கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமையால் மாணவி பாதிக்கப்பட்ட நிலையில் அவர் படித்து வரும் பள்ளி இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று திறக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் என்சிசி முகாம் எனக் கூறி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அந்த மாணவி படித்த பள்ளி இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
அந்த பள்ளி மாணவிகள் அச்சமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு கவுன்சிலிங் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
தன்னம்பிக்கை தைரியத்துடன் இருப்பது குறித்தும் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





