சேற்று நீரில் குளித்து சாலையை சீரமைக்க கோரி நூதனப் போராட்டம்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி ஒருவர் சாலையை சீரமைக்க கோரி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
சஞ்சய் என்பவர் தனது பகுதியில் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்ற நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி சஞ்சய் நகரை நடுரோட்டில் பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் அமர்ந்து கோப்பையால் சேற்றுநீரை உடலில் இறங்கி குளிக்க ஆரம்பித்தார். சிபிஐ கட்சி நிர்வாகி போராட்டத்தை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





