--- --:--:-- --

நலமுடன் வீடு திரும்பிய பாடகி பி.சுசீலா..!

10

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி பி. சுசீலா பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

பத்மபூஷன் விருது, கலைமாமணி விருது, 5 முறை தேசிய விருது, 3 முறை தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அலங்கரித்துள்ளார்.

 

சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள இல்லத்தில் பி சுசீலா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ள பி.சுசீலா தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் தன்னை அக்கறையுடன் கவனித்து கொண்ட செவிலியர்களுக்கும்வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.அந்த வீடியோவில், மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் ,மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்ட செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அவர்கள் காட்டிய பாசத்திற்கும் அக்கறைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் நலம் பெற பிரார்த்தனை செய்த கோடான கோடி அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.” என கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon