ஐந்தாண்டுகளுக்கு பிறகு திருப்பூரில் நடந்த மாற்றம்..!
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி அதிகரித்திருப்பது உற்பத்தியாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த ஆண்டுகளில் ஜிஎஸ்டி கொரோனா பொதுமுடக்கம், சர்வதேச பிரச்சனைகள், கண்டெய்னர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் நிலைகுலைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் பின்னலாடை தொழில் தற்பொழுது மீண்டும் வேகம் எடுத்துள்ளது. ஜூலையில் திருப்பூரில் இருந்து 3000 கோடி மதிப்பில் பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதே மாதத்தில் 2600 கோடி ரூபாய் மதிப்பிலேயே பின்னலாடைகள் ஏற்றுமதியாகி இருந்தன.
வங்கதேச பிரச்சனைகளால் தங்களுக்கு கூடுதலாக ஆர்டர்கள் கிடைக்கவில்லை என கூறும் பின்னலாடை நிறுவனங்கள் இந்திய ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் வரவேற்பு அதிகமாக இருப்பதே ஏற்றுமதி அதிகரிக்க காரணம் என தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் சென்ற ஆண்டு 33,000 கோடி ரூபாய் அளவிற்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 37 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





