--- --:--:-- --

திருப்பூரில் ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான முகாம்..!

1

த்திய ஹஜ் கமிட்டி 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு கடந்த 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை ஆன்லைனில் ஹஜ் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டது.

 

இதன் அடிப்படையில் ஹஜ் செய்வதற்கு கண்டிப்பாக பாஸ்போர்ட் தேவை என்பதால் திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு மற்றும் தாராபுரம் என். வி. எம் பொது நல அறக்கட்டளை (நபி வழி மன்றம்) இணைந்து பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான பாஸ்போர்ட் முகாம் திருப்பூர், கோம்பை தோட்டம், ஆசாத் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

முகாமை ஆசாத் பள்ளி தாளாளர் முகமது சிராஜுதீன் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழு ஒருங்கிணைப்பாளர் சஃபியுல்லா வரவேற்றார். என். வி. எம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சையது ரியாஜ் தலைமையில் தலைவர் அல்பத்தாஹ், செயலாளர் முகமது இஸ்மாயில், ஹஜரத் முகமது அனஸ், முகம்மது முஹாது, காஜா நஜ்முத்தீன், முஹம்மது தெளபீக் ஆகியோர் கொண்ட குழுவினர் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வந்த பயனாளிகளுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்தும், ஆவணங்களை சரி பார்த்தும், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் முன்பதிவு செய்தும் தந்தனர்.

 

முகாமில் 105 பயனாளிகளுக்கு விண்ணப்ப பதிவு செய்து தரப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் ஒருங்கிணைந்த குழுவின் சைபுதீன், சாதிக் பாட்ஷா, பாண்டியன் நகர் அப்துல்லா, பிரிசம் டூர்ஸ் மன்சூர் அஹமத், ரிஜ்வான், முகமது இசாக் ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.

Right Menu Icon