தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நிதிநிலை அறிக்கை 2024 தலைப்பில் கருந்தரங்கம்..!
திருப்பூர், வஞ்சிபாளையம்,தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் 06.08.24 அன்று “நிதிநிலை அறிக்கை 2024 என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேச்ரல் நான்சி பிலிப் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கருத்தரங்கில் GMAP அசோசியேட்ஸ் பங்குதாரரும், தணிக்கையாளருமான அருள்ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர்தன்உரையில் “மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள், அதிக முதலீடு பெற்ற முக்கிய துறைகள், வேலை வாய்ப்பு திறன் மேம்பாடு, வரி சீரமைப்பு நிறைந்த அறிவிப்புகள், 2024-25 ஆம் நிதியாண்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகள், மத்திய அரசின் செலவு மற்றும் வருமானத்திற்கான நிதி ஆதாரங்கள், வரி கட்டமைப்பில் அரசு செய்துள்ள மாற்றங்கள், புதிய வருமான வரி விகிதம், விவசாயிகள் தொழில்துறையினருக்கான சிறப்பு திட்டங்கள்” பற்றி எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாக மாணவிகள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.





