திருவாரூரில் ரயில் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு..!
திருவாரூரில் ரயில் மோதி கூலிதொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்தூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ரவி என்பவர் இன்று வழக்கம் போல் தனது வேலையை முடித்துவிட்டு மலம் கழிப்பதற்காக ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக காரைக்குடியில் இருந்து திருவாரூர் வந்த பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ரவி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மலம் கழிப்பதற்காக சென்ற நபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





