பதநீர் விற்ற பெண்ணிடம் அத்துமீறிய 2 இளைஞர்கள்..!
திசையன்விளை அருகே பதநீர் விற்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க செயினை பறித்து சென்ற இரண்டு இளைஞர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அருகே உள்ள காரை கோயில் கிராமத்தைச் சேர்ந்த கனிப்பழம் என்பவர் பதநீர் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் காரைக்கோயில் பகுதியில் வழக்கம் போல பதநீர் விற்றுக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பதநீர் குடிப்பது போல சென்று கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.





