நீர் நிலைகளில் குளிக்க தடை விதித்த வேலூர் மாவட்ட ஆட்சியர்..!
வேலூர் மாவட்ட நீர்நிலைகளுக்கு சிறுவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 13-ஆம் தேதி ஏரியில் குதித்து இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் நீர்நிலைகளுக்கு சிறுவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் நீர் நிலைகளில் இறங்குவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் நான்கு சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கல்குவாரிகளில் உள்ள ஏரிகளில் எக்காரணம் கொண்டும் சிறுவர்கள் குளிக்க கூடாது என எச்சரித்துள்ளார்.





