பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் தெரு நாய்களுக்கு உணவு..!
பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் நாய்களுக்கான உணவு கிடைக்கும் இயந்திரத்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. துருக்கியில் பணம் வழங்கும் ஏடிஎம் எந்திரங்கள் போல நாய்களுக்கான உணவு விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது.
இந்திரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் போட்டால் மறுபுறம் நாய்களுக்கான உணவு மற்றும் தண்ணீர் விநியோகிக்கப்படும். இதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுகள் குறைவதோடு தெரு நாய்களும் பசியாறும் என விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேடிஎம் நிறுவன வெளியிட்டுள்ள பதிவில் மாற்றத்தை உருவாக்கும் இந்த திட்டத்திற்கு நிதி முதலீடு செய்ய வருகிறேன் என பதிவிட்டார்.





