--- --:--:-- --

100 நாள் வேலைக்கு சென்ற தாய்.. ஏரியில் தவறி விழுந்து சிறுமி பலி..!

6

ராணிப்பேட்டையில் 100 நாள் வேலைக்கு தாயுடன் சென்ற 4 வயது சிறுமி நீரில் மூழ்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் பலவட்டம் பாடிகிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரது மனைவி மோனிஷா.

 

தனது 4 வயது மகள் பிரியங்காவை அழைத்துக் கொண்டு 100 நாள் வேலைத்திட்ட பணிக்காக சென்றுள்ளார். ஏரிக்கரைக்கு அருகே வேலை செய்து கொண்டிருந்த பொழுது சிறுமி பிரியங்கா ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது அவர் ஏரியில் தவறி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமி பிரியங்காவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

Right Menu Icon