ஆற்றில் அடித்து வரப்பட்ட முதலை..!
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நடைபாதை அருகே உள்ள பாறை மீது முதலை படுத்திருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரால் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்லும். இந்த சூழ்நிலையில் ராசிமனையில் ஆலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முதலைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு உட்பட்ட நடைபாதை அருகே உள்ள பாறை ஒன்றின் மீது முதலை படுத்திருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





