மானாமதுரை வங்கியில் கொலை முயற்சியும் துப்பாக்கிச்சூடும்..!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வாடிக்கையாளரை வெட்டிக் கொல்ல முயன்ற அவர்கள் மீது காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மானாமதுரையில் உள்ள கனரா வங்கி கிளைக்கு தங்கமணி என்பவர் வந்திருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் தங்கமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அதை கண்ட வங்கி காவலாளி தாக்குதலை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 5 பேர் கும்பல் செல்வத்தை தாக்கியுள்ளது. இதனையறிந்து தற்காப்புக்காக தான் வைத்திருந்த துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியவர்களை நோக்கி காவலாளி சுட்டுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக செல்வமணி என்ற வாடிக்கையாளரின் காலில் பாய்ந்தது துப்பாக்கியால் சுட்டதும் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதனை தொடர்ந்து 5 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட தங்கமணியும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த செல்வம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மானாமதுரையில் கடந்த மாதம் முன்னாள் நிர்வாகி சரவணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தங்கமணி கைது செய்யப்பட்டான். எனவே அதற்கு பழிக்குப்பழியாக அவரை கொல்ல முயற்சி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.





