--- --:--:-- --

மதுவில் விஷம் கலந்து கொடுத்து நண்பனை கொலை செய்த நண்பன்..!

3

யிலாடுதுறை மாவட்டத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து நண்பனை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஓட்டுனரான ஜோதிபாஸ் என்பவருக்கும் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

தொடர்ந்து செல்போனில் சார்ஜ் இல்லாததால் நண்பரான ஜெரலின் செல்போனை வாங்கி அதிலிருந்து அந்த பெண்ணிடம் ஜோதிபாஸ் ஒரு முறை பேசியுள்ளார். அதன் பிறகு அந்த எண்ணிற்கு ஜெரால்ட் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனை அறிந்த ஜோதிபாஸ் மது அருந்தலாம் என ஜெரால்டை கடந்த 9ம் தேதி அழைத்துச் சென்று விஷம் கலந்த மதுவை அவருக்கு அதிகமாக ஊற்றிக் கொடுத்துவிட்டு சந்தேகம் வராமல் இருக்க தானும் சிறிதளவு மது அருந்திதாக கூறப்படுகிறது.

 

இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜெரால்டு உயிரிழந்தார். மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் விஷ மதுவை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறிய நபர், அந்த விஷம் கலந்த மதுவை தான் கூறியும் கேட்காமல் ஜெரால்டு வாங்கி குடித்துவிட்டதாகவும் ஜோதிபாஸ் ஏற்கனவே தெரிவித்த நிலையில் அது திட்டமிட்ட கொலை என போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon