--- --:--:-- --

வங்கி வாசலில் நடந்த கொடூரம்..!

9

பெரம்பலூரில் அடகு வைத்த நகையை மீட்க சென்றவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்.

 

உணவகம் நடத்திவரும் இவர் வங்கியில் தான் அடகு வைத்திருந்த பணத்தை மீட்க சென்றுள்ளார். ஆனால் தாமதமாக சென்றதால் அவர் நகையை மீட்காமல் வெளியே வந்தார். அப்பொழுது பைக்கில் வேகமாக வந்து இரண்டு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுரேஷை எட்டி உதைத்து 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon