--- --:--:-- --

அமித்ஷாவின் அடுக்கடுக்கான சர்ச்சை பேச்சு!

download (1)

இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை வெற்றி அடைந்து இருக்கிறதா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் கேள்வி எழுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என அமைச்சர் பேசியது பலத்த எதிர்ப்பை சந்தித்திருக்கும் நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்று விட்டது என்பது மக்களுக்கு சந்தேகம் இல்லை என பேசினார். நாம் நமது இலக்கை அடைந்து விட்டோமா என கேள்வி எழுப்பிய அமைச்சா் பலகட்சி ஜனநாயகம் உரையாற்றிய மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு நாளும் ஊழல் நிறைந்ததாகவும் எல்லையில் பாதுகாப்பற்ற நிலையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலும் பொதுமக்கள் அன்றாடம் வீதிகளில் இறங்கி போராடிய நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

பிரதமர் மோடியின் அரசு எந்தவொரு திட்டத்தையும் வாக்கு வங்கிக்காக செயல்படுத்தவில்லை என்றும் அது மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சில அரசுகள் முக்கிய முடிவை எடுக்க 30 ஆண்டுகள் ஆனதாகவும் ஆனால் மோடியின் அரசு ஐந்து ஆண்டுகளில் 50 மிக முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon