விக்ரம் லேண்டர் நிலை குறித்து அருகே அதன் இருப்பிடத்தை நோக்கி சென்று உள்ள நாசாவின் எல்ஆர்ஓ ஆர்பிட்டர் அதிநவீன கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் பிரக்யான் ஓவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திராயன் விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூன் 22ஆம் தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. .
ஆர்பிட்டர் இல் இருந்து பிரிந்து சந்திரனில் இருந்து 35 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்த அவர் கடந்த 7ஆம் தேதி அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது. நிலவிலிருந்து சரியாக 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பொழுது விக்ரம் லேண்டருக்கும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது நிலையில் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் எங்கு தரையிறங்கியுள்ளது என்று இஸ்ரோ தனது ஆர்பிட்டரை பயன்படுத்தி கண்டுபிடித்தது. மேலும் நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் விழுந்துகிடக்கும் பகுதிக்கு மேலே இன்று கடக்க உள்ளது. இதன் மூலம் முக்கிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம் என நாசா கூறியுள்ளது.