இருளப்ப சுவாமி ஜீவசமாதி அடைய போவதாக மீண்டும் அறிவிப்பு

ஜீவசமாதி அடைய போவதாக கூறி நன்கொடை வசூலித்து ஏமாற்றியதாக கூறி 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜீவ சமாதி அடையப் போவதாக இருளப்ப சுவாமி மீண்டும் தெரிவித்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்ப சுவாமி தீவிர சிவபக்தனாக ஜீவ சமாதி அடையப் போவதாக கடந்த 12ம் தேதி பூஜைகள் ஈடுபட்டதை அடுத்து அதை வைத்து அவரது மகன் கண்ணாயிரம் பலரிடம் நன்கொடை வசூலித்து உள்ளான்.

 

இறுதியில் இருளப்ப சுவாமிகள் ஜீவசமாதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பணம் வசூலித்து ஏமாற்றியதாக கண்ணாயிரம் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். வசூலான பல லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பி ஓடிய மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் தான் ஜீவசமாதி அடையப் போவது உறுதி என்றும் சிவன் கட்டளையிட்டு விட்டதாகவும் இருளப்ப சுவாமி வரும் கார்த்திகை மாதம் ஜீவசமாதி அடையப் போவதாக மீண்டும் கூறியுள்ளார்.


Leave a Reply