--- --:--:-- --

பீகாரில் மீண்டும் பாலம் விபத்து..!

10

பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்த மூன்று பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்வாய் ஒன்றின் மீது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நேற்று காலை அந்த பாலம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக பிகாரின் மரவந்த கால்வாயின் மீது கட்டப்பட்டிருந்த 45 ஆண்டுகள் பழமையான பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.

 

அதற்கு முன்பாக அராலியா மாவட்டத்தில் உள்ள ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த புதிய பாலம் கடந்த 18ஆம் தேதி திடீர் என இடிந்து விழுந்தது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று பாலங்கள் இடிந்து விழுந்தது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon