திருப்பூரில் பயங்கரம்..பட்டப் பகலில் வாலிபர் வெட்டிக்கொலை!
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கருணாகரபுரியை சேர்ந்த சதீஸ்குமார் (30) பனியன் நிறுவனத்தில் டைலராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் இவர் இன்று மாலை சுமார் 6 மணியளவில் கோல்டன் நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர் . அரிவாள் வெட்டுப்பட்டு நிலைகுலைந்த சதீஸ்குமார் இரத்தவெள்ளத்தில் ரோட்டில் விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பெரும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் அரங்கேரிய படுகொலை சம்பவத்தால் அப்பகுதியில் பேரதிர்ச்சியாக காணப்பட்டது.





