பீஃப் ஃப்ரை வாங்கிய வாடிக்கையாளர் ஷாக்..!
உணவகத்தில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி, பூரான், பிளேடு இருந்ததாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள உணவகத்தில் வாங்கிய பீஃப் ஃப்ரையில் பல்லி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மாதிரிகளை சோதனைக்கு எடுத்து சென்றனர்.





