ஜூலை முதல் “கலைஞர் கனவு இல்லம்” திட்டம்..!
“கலைஞர் கனவு இல்லம்” திட்டம் ஜூலை மாதம் முதல் தொடங்கவும், பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ₹3.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கூடுதல் நிதிக்கு, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக ₹1 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும்.





