கடலில் குளித்தவர்களுக்கு ஜெல்லி மீன்கள் செய்த சம்பவம்..!
ராமநாதபுரம் மரியம்மாள் கடற்கரையில் குளித்தவர்களுக்கு ஜெல்லி மீன்களால் உடனடி ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
விடுமுறையை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குடும்பத்துடன் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
அப்பொழுது கடலில் அதிக அளவில் காணப்பட்ட ஜெல்லி மீன்களால் கடலில் குளித்தவர்களுக்கு உடல் அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டது. இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





