--- --:--:-- --

வீடு திரும்பிய ரயில்வே ஊழியர்களுக்கு உயிர் பயம் காட்டிய யானை ..!

4

குன்னூரில் காட்டு யானையிடம் சிக்கிய ரயில்வே ஊழியர்களை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியிருப்பதால் சமநிலை பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் குன்னூர் அருகே தோட்ட பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்தது. அப்பொழுது பணி முடிந்து திரும்பி சென்று கொண்டிருந்த ரயில்வே ஊழியர்களை காட்டு யானை துரத்தியது.

 

அப்பொழுது உடனடியாக விரைந்த வனத்துறையினர் ரயில்வே ஊழியர்களை மீட்டு பாதுகாப்பாக வந்தன. ஆனால் தொடர்ந்து சாலை பகுதிக்கு வந்த காட்டு யானையை வனத்துறையினர் காட்டு பகுதிக்குள் விரட்டினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon