--- --:--:-- --

சாலையில் காரில் அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்..!

3

கேரள மாநிலம் மூணாறு சுற்றுலா பயணிகள் கார் ஆபத்தான முறையில் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூணாறு கேட் பகுதியில் உள்ள கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சேரி பதிவெண் கொண்ட கார் சென்றது.

 

அதில் கார் கண்ணாடியில் இளம்பெண் உட்பட மூன்று பேர் காரின் கதவுகளில் அமர்ந்து கொண்டு ஆரவாரம் செய்து பயணம் மேற்கொண்டனர். இதனை பின்னால் வந்த காரில் இருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து மோட்டார் வாகனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களில் மூன்றாவது முறையாக இது போன்ற ஆபத்தான முறையில் பயணம் செய்யும் சம்பவங்கள் நடந்துள்ளதால் மோட்டார் வாகன துறையினர் சிறப்பு சோதனையை தொடங்கியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon