--- --:--:-- --

திருவாடானை அருகே கருமொழி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டு..!

10

திருவாடானை அருகே கருமொழி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கருமொழி கிராமத்தில் அருள்மிகு திருவேட்டை அய்யனார், அருள்மிகு தர்ம முனிஸ்வரர் ஆலய வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு  நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

 

முதலில் கோவில் காளைகள் பேராவூரணியில் இருந்து வரவழைக்கப்பட்டு முதல் மரியாதை செலுத்திய பிறகு அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து விடப்பட்டது .

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகளுக்கு துண்டு , வேஷ்டியும் உரிமையாளர்களுக்கு தாம்பூல தட்டு, பிளாஸ்டிக் சேர் கரு மொழி கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்டது.

 

வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீரி பாய்ந்து ஓடியது அதை அடக்க காளையர்கள் விரட்டி சில காளைளை அடக்கினர். இதை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு ரசித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon