நீட் தேர்வு குளறுபடி.. உச்சநீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வில் இன்று விசாரணை..!
நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் இது குறித்து விசாரித்த நீதிமன்றம் தேசிய தேர்வுகள் முகமைக்கு நோட்டீஸ் பிறப்பித்ததோடு வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது இன்று மீண்டும் உச்சநீதிமன்ற விடுமுறை காலச் சிறப்பு விசாரணை நடைபெறுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





