--- --:--:-- --

கையில் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த 16 வயது சிறுமி..!

10

திருப்பத்தூரில் கையில் குழந்தையுடன் வந்த 16 வயது சிறுமி தனது குழந்தையின் அப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார். திருப்பத்தூர் அடுத்த ஆவியூரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ் என்ற 19 வயது இளைஞனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

 

கர்ப்பமடைந்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த பின் குழந்தையும் பெற்றுள்ளார். இது குறித்து சைல்டு ஹெல்ப்லைனில் யாரோ புகார் கொடுத்த நிலையில் நிதிஷை போலீசார் தேடி வருகின்றனர்.

 

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தையுடன் வந்த அந்த மாணவி நிதிஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் தான் 11ஆம் வகுப்பு படிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்தார்.

 

அந்த மாணவி நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 443 மதிப்பெண்கள் எடுத்திருந்ததை கண்டு ஆச்சரியப்பட்ட மாவட்ட ஆட்சியர் படிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் இது தொடர்பான கோரிக்கையை நீதிமன்றத்தில் தான் முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon