தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன 5 உயிர்கள்..!
சேலம் அருகே லாரியின் பின்னால் இருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
சேலம் அரூர் நெடுஞ்சாலையில் சுக்கம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு லாரி வேகத்தடை மூலமாக கடந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்களில் இரண்டு குடும்பத்தினர் இருந்தனர்.
அப்பொழுது ஆற்றல் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனங்களின் மீது கட்டுப்பாடு இல்லாமல் மோதியது. இரு சக்கர வாகனங்களில் இருந்த இரண்டு வயது குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒரு பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த குடும்பத்தினர் சுத்தம் பட்டியை எடுத்த பூம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.
குறுகலான நெடுஞ்சாலையில் விபத்து பகுதி என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு இருந்தும் வேகமாக பேருந்து இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




