--- --:--:-- --

பிரிட்ஜை தண்ணீர் ஊற்றி கழுவிய ஹோட்டல் ஊழியருக்கு நடந்த சோகம்..!

5

சென்னை துறைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சுத்தம் செய்யும் பணியின் பொழுது ஃப்ரிட்ஜை தண்ணீர் ஊற்றி கழுவிய ஓட்டல் ஊழியர் மீது திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

 

அவரை காப்பாற்ற முயன்ற சக ஊழியர்கள் ஆன திரிபுராவை சேர்ந்த மேலும் இரண்டு பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்ததில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மற்ற இருவரும் சிகிச்சைக்குப் பின்னர் நலமுடன் திரும்பினர் .

 

Right Menu Icon