--- --:--:-- --

அம்மாவின் மரியாதைக்காக 1000 வேலைகளை இழக்க தயார்.. கங்கனாவை அறைந்த காவலருக்கு வந்த புதிய வேலை..!

6

அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் என்று கங்கனாவை தாக்கிய பெண் காவலர் தெரிவித்துள்ளார். பெண் காவலர், நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தார்.

 

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கங்கனாவை அறைந்த பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் காவலர்கள் அவரை கைது செய்தனர்.

 

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறித்து அவதூறாக பேசியதால் கங்கனாவை தாக்கியதாக தெரிவித்திருந்த குழுவின் தலைவர் அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் என்று கூறியுள்ளார்.

 

இந்த நிலையில் கங்கனாவை தாக்கிய பெண் காவலருக்கு இசையமைப்பாளர் விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார். சிஐஎஸ்எப் பெண் காவலரின் கோபத்தை புரிந்து கொள்வதாக குறிப்பிட்ட அவர் அவருக்கு வேலை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon