--- --:--:-- --

பீஸ் கட்டவில்லை என கூறிய கல்லூரி நிர்வாகம்..கொந்தளித்த மாணவர்கள்..!

4

சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் செலுத்திய கட்டண தொகை கணக்கில் வரவில்லை என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவேற்காட்டில் இயங்கி வரும் கல்லூரியில் எம்பிஏ மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் முதலாம் ஆண்டில் பயின்று வருகின்றனர். அவர்களிடம் கல்வி கட்டண தொகையாக மூன்று லட்சத்தை கல்லூரி நிர்வாகம் கூறிய வங்கி கணக்கில் செலுத்த கூறியதையடுத்து மாணவர்கள் கட்டியுள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மாணவர்களிடம் கட்டணம் நிலவையில் உள்ளதால் வகுப்புகள் எடுக்க விடாத உடனே படத்தை கட்ட வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் நாங்கள் ஏற்கனவே வங்கியில் பணத்தை கட்டி விட்டோம் என்று கூறியுள்ளனர்.

 

ஆனால் இதை ஏற்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார் கல்லூரி நிர்வாக ஊழியர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். குளறுபடிகளை கல்லூரி நிர்வாகம் விசாரித்து வருகிறது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon