கடன் தொல்லை குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!
பல்லடம் அருகே கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட குடும்பம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாரி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது மனைவி விஜய் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ஆன்லைன் மூலம் மர்ம நபர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் கடன் தருவதாக ராஜுவை தொடர்பு கொண்டுள்ளனர்.
இதை நம்பி நண்பர்களிடம் நாற்பதாயிரம் ரூபாய் கடன் பெற்று ஆவண செலவிற்காக மர்ம நபர் அளித்த வங்கி கணக்கில் ராஜீவ் பணம் செலுத்தியுள்ளார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்துள்ளது.
கொடுத்த கடனை நண்பர்கள் திருப்பி கேட்ட நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு ராஜ குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





