--- --:--:-- --

சிறுவனை கடித்த கட்டு விரியன் பாம்பு..காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்..!

9

நாகையில் பாம்பு கடித்து கோமாவிற்கு சென்ற சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

 

திருக்குவளை அடுத்த மோகனூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் திவாகரை கட்டுவிரியன் பாம்பு சமீபத்தில் கடித்தது. இதனையடுத்து திவாகரை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.

 

பாம்பின் விஷம் ஏறியதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சிறுவன் திவாகர் கோமா நிலைக்கு சென்றான். சிறுவனுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

 

தொடர்ந்து ஏழு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்த திவாகர் இன்று வீடு திரும்பியுள்ளார். கொடிய விஷத்தினால் கோமாவிற்கு சென்ற 10 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon