13 வயது சிறுவனை கொன்ற 17 வயது சிறுவன்..!
காரைக்கால் அருகே 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்கால் அடுத்த நிரவி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டான். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் கொலை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 வயது சிறுவனை தனிப்படையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலையான சிறுவனின் சகோதரிகளிடம் கைது செய்யப்பட்ட சிறுவன் தவறாக நடக்க முயன்றுள்ளான்.
இதனை தட்டி கேட்டதால் 13 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து 17 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை செய்ய பயன்படுத்திய கத்தி ரத்தக்கரை படிந்த இரண்டு கையுறைகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





