அடக்கம் செய்யப்பட்டது தீபக் ராஜாவின் உடல்..!
நெல்லையில் கொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. வாகைக்குளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா கடந்த 20ஆம் தேதி நெல்லையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்ததையடுத்து உறவினர் உடலை பெற உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக நெல்லை மாநகர பகுதிகள் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தீபக் ராஜாவின் சகோதரர் அந்தோணி முத்துவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை – கன்னியாகுமரி நெடுஞ்சாலை வழியாக அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அந்த பகுதியை கடப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு மேலானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் பேரணியில் பங்கேற்றவரின் வாகனங்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாகை குளம் கிராமத்தில் தீபக் ராஜாவின் உடன் அடக்கம் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





