பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை..!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் 4-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்தநிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் திங்கட்கிழமை காலை 9:30 மணியளவில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் புதிய நிர்வாகிகள் நியமனம், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடைபெறுவதால், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




