மாயி பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழில் மாணிக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சூர்ய பிரகாஷ் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
இதற்கு நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.