கோவையில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!
கோவையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான இராமன் என்று குடியிருப்பு உள்ளது.
400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் நேற்று அங்குள்ள பூங்காவில் குழந்தைகள் சறுக்கி விளையாடும் பகுதிக்கு குழந்தைகள் சென்ற பொழுது இரண்டு குழந்தைகள் மீது மின்சாரம் பாய்கிறது. நிகழ்விடத்திலேயே குழந்தைகளை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பூங்காவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக மின்சார வயர்கள் சேதமாகியதாக கூறப்படும் நிலையில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





