ஆட்டு ரத்தத்தை குடித்த ஓட்டுனர் உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோயில் திருவிழா அருகே கிடாவெட்டி ரத்தம் குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கொளப்பலூர் செட்டிபாளையத்தில் அண்ணம்மாள் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அப்பொழுது வேண்டுதலுக்காக பலி கொடுக்கப்பட்ட ஆட்டு கிடாயின் பச்சை ரத்தத்தில் வாழைப்பழத்தை பிசைந்து பூசாரிகள் சாப்பிட்டுள்ளனர். இந்த பூஜையில் நெல்லை கவுண்டன் பாளையம் பாலாஜி நகர் சேர்ந்த 45 வயதான பழனிச்சாமி என்பவரும் பங்கேற்றுள்ளார்.
பூஜையில் ஆட்டுக்கடாவின் பச்சை ரத்தத்தை அவர் குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் பழனிச்சாமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த மத்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் கார் ஓட்டுநர் என்பதும், அவருக்கு மனைவி மற்றும் இறந்த குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





