மேக கூட்டத்திற்குள் சிக்கிய விமானம்..சட்டென 6,000 அடிக்கு கீழே விழுந்து அதிர்ச்சி..!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார். மேக கூட்டத்தில் விமானம் உரசியதையடுத்து விமானம் அவசர அவசரமாக பேங்காக்கில் தரையிறங்கியது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் 211 பயணிகள், 18 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். அந்தமான் கடற்பரப்புக்கு மேலே விமான பறந்து கொண்டிருந்த பொழுது திடீரென மேக கூட்டத்திற்குள் சிக்கியுள்ளது. மேககூட்டத்தில் சிக்கியதால் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென 6,000 அடி கீழ்நோக்கி இறங்கியுள்ளது.
அதாவது 37,000 அடியில் இருந்து சில நிமிடங்களில் 31 ஆயிரம் அடி இறங்கியதால் விமானம் குலுங்கி பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் ஒருவர் மீது ஒருவர் மோதி 30 பேர் படுகாயம் அடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து விமானம் அவசர அவசரமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு தரை இறங்கியது. இதில் 200 வாகனங்கள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





