திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாக பால்குட பெருவிழா..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேகவல்லி சமேத ஆதிரெத்தினஸ்வரர் ஆலயம் உள்ளது.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவத்தலங்களில் 8வது ஸ்தலமாக விளங்கும் இக்கோயில் மாணிக்கவாசகர் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும், மூலவரான ஆதிரெத்தினேஸ்வரரை இன்றளவு சூரிய பகவான் பூஜிக்கும் நிகழ்வு நடந்து வருகிறது. அந்த அளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும்.

இக்கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் காலை மாலை சுவாமியும் அம்மனும் பரிவார தெய்வங்களுடன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் சிறப்பு நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர் சிறுமியர் கலந்து கொண்ட பால்குட உற்சவ விழா நடைபெற்றது. கோவில் முன்பு இருந்து பால்குடம் ஏந்தி தேரேடும் வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
பால்குடம் ஏந்தி வீதி உலா வந்த பாலால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு முருகன் அருள் பெற்று சென்றனர் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆடானை .நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.





