14 ஆண்கள் மீது போலியாக பாலியல் புகார் அளித்த பெண்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் வழக்கில் பெண் ஒருவர் ஆண்களிடம் பணம் பறித்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தன்னை சட்டம் பயின்றவராக வழக்கறிஞர் நீதி மினாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட பாவனா ஷர்மா என்ற பெண் பின்பு பணம் கொடுக்காவிட்டால் தன் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடர்வேன் என அவரை மிரட்டி பணம் பறித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதேபோல் பல ஆண்கள் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் பாலியல் பலாத்கார வழக்கு இருப்பதை கண்டுபிடித்த வழக்கறிஞர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து கைது செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.





