--- --:--:-- --

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த விவகாரம்..சிபிசிஐடி விசாரணை..!

3

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்தாக கூறிய விவகாரம் மற்றும் இரட்டை குவளை வழிமுறை குறித்து சிபிசிஐடி பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக கூறிய விவகாரம் மற்றும் இரட்டை குவளை முறை குறித்து சிபிசிஐடி பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

சங்கம் விடுதி ஊராட்சியில் உள்ள கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. அதில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரித்த தமிழக காவல்துறை குடிநீரில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என்று கூறினார். ஆனால் முறையான விசாரணை நடத்தவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

 

மேலும் 8 கிராமங்களில் இரட்டை குவளை முறை நீட்டிப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேநீர் கடைகளிலும் இரட்டை குவளை முறை குறித்து தனித்தனி குழுவாக சிபிசிஐடி பிரிவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon