சினிமாவில் நடக்கும் அந்த மாதிரி விஷயங்களை தவிர்க்க வேண்டும்.. நடிகை நிகிலா..!
மலையாள படங்களில் நடித்து வந்த நிகிலா விமல், கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கடைசியாக தமிழில் சரத்குமார் அசோக் செல்வன் நடித்திருந்த போர் தொழில் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். தற்போது நிகிலா விமல் இரண்டு மலையாளப் படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நிகிலா விமல், கதைக்கு தேவைப்படும் கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற வேண்டும். படத்திற்கு தேவைபடாமல் பெண் கதாபாத்திரங்களை வைப்பதற்கு பதிலாக வைக்காமல் இருப்பதே நல்லது.
சமீபத்தில் வெளிவந்த ஆவேஷம், மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற படங்கள் மாதிரி தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை தவிர்க்கவேண்டும் என்று நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




