--- --:--:-- --

எடப்பாடி அருகே கல்லூரி மாணவி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து..!

5

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். இது தொடர்பான பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

வெள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த மதுமிதா என்ற கல்லூரி மாணவி மின்கட்டணம் செலுத்துவதற்காக சித்தூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். நான்கு ரோடு சந்திப்பில் சாலையை கடக்க நின்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

 

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மதுமிதா எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon