--- --:--:-- --

நான்கு வருட காதல்.. திடீரென மாறிய முடிவு..!

6

நான்காண்டுகளாக இளைஞர் ஒருவரும் தானும் காதலித்து வருவதாகவும் சாதியை காரணம் காட்டி அவர்கள் தந்தை திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் இளம் பெண் ஒருவர் சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வரும் தங்களது காதல் இரு குடும்பத்தினருக்கும் தெரியும் என்றும் காதலனின் குடும்பத்தினர் நீண்ட காலமாக மருமகளே என்று அழைத்து வந்த நிலையில் தற்போது சாதி பிரச்சினையை எழுப்புவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

 

தமது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாலை 7 மணிக்கு காதலன் வீட்டிற்கு சென்ற அந்த பெண் இரவு 12 மணி வரை அங்கேயே இருந்தார். உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon