சகஜமாக பேசிய மாணவி.. தட்டதட்ட திறக்காமல் இருந்த கதவு..!
திருத்தணி அருகே தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி கோடை விடுமுறையை முடிந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
வீட்டில் சகஜமாக இருந்து வந்த அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்த கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இறந்த பெண்ணின் செல்போனை கைப்பற்றி விசாரித்து வருவதாகவும் இதற்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





